குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-16 07:13 GMT

ஊட்டி நகரில் முக்கியமானதாக எட்டின்ஸ் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக வரும் வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. ஆனால் அந்த சாலையில் உள்ள என்.டி.சி. பகுதியில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்