தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பயணியர் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்கூடையின் முன் பகுதியில் கான்கிரீட் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகனத்தில் செல்பவர்கள் தடுமாற்றத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த கான்கிரீட் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.