சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-10-19 16:13 GMT

நாகை பால்பண்ணை சேரி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் மழை நீர் வடிகால் வாய்க்கால் இல்லை. இதனால் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்