நெல்லை மாவட்டம் திருப்பணி கரிசல்குளம் கிராமம் மானூர் யூனியனுக்கு உட்பட்டதாகும். கடந்த சில மாதங்களுக்கு முன் பழைய பேட்டை முதல் திருப்பணி கரிசல்குளம் இணைப்பு சாலை போடப்பட்டது. தற்போது அந்த சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையை அடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையாகி விட்டது. மழை பெய்யும்போது சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, அந்த சாலையை சரிசெய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.