கூடலூர் நகருக்குள் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது பெய்யும் மழையால் சாலை மேலும் மோசம் அடைந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறையினர் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.