மதுரை மாவட்டம் ஆலம்பட்டி-சேடப்பட்டி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்பகுதியில் செல்லும் வழியில் உள்ள நடுவங்கோட்டை சாலையின் ஒருபகுதி மட்டுமே அமைக்கப்பட்டுள்ள நிலையில் மறுமுனையில் செல்வதற்கான சாலையானது அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையை ஒருவழி பாதையாக பயன்படுத்துவதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையை உடனடியாக அமைக்க வேண்டும்.