பூக்கடை வீதி சீரமைக்கப்படுமா?

Update: 2022-10-16 17:22 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் பூக்கடை வீதியில் திருமண மண்டபம், ஜவுளிக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உள்ளன. இந்த வீதியில் இரவு, பகல் பாராமல் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் எப்பொழுதும் வந்து கொண்டே இருப்பார்கள். இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வீதியில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. பாதாள சாக்கடை திட்டத்திற்காக பேவர் பிளாக் எடுக்கப்பட்டது. இதனால் பூக்கடை வீதி முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளன. மழைக்காலங்களில் குண்டும், குழியுமான சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. எனவே. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பூக்கடை வீதியில் தார் சாலையோ அல்லது சிமெண்டு சாலையோ அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

-கிருஷ்ணன், ராசிபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்