காஞ்சீபுரம் மாவட்டம் எஸ்.எஸ்.கே. நகர் முதல் தெருவில் வசித்து வருகிறோம். இந்த தெருவில் 12 வருடத்திற்கு முன்பு போட்ட சாலை பள்ளமாக இருப்பதால் மழைக்காலத்தில் சுற்றியுள்ள் அனைத்து தெருக்களில் இருந்தும் நீர் வழிந்தோடி எங்கள் தெருவிலேயே வந்து தேங்குகிறது. மழைநீர் வழிந்து ஓடும் வகையில் சாலை இல்லை. இதனால் மழைநீர் காய்ந்து வடிய குறைந்தது ஐந்து நாட்களாவது ஆகிறது. அதற்குள் சேராகி கொசு உற்பத்தியாகி அந்த இடத்தில் தூர் நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரமற்ற நிலையில் இருந்து வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.