தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சிக்குட்பட்ட நேரு நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள பிரதான சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.