கணபதி ராஜீவ் காந்தி சாலை பாலாஜி லே அவுட்-2 பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க சாலை தோண்டப்பட்டது. இந்த பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, குழி மூடப்பட்டது. ஆனால் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் தற்போது பெய்து வரும் மழையில் சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் முதியவர்கள், குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பினரும் நடந்து செல்லும்போது வலுக்கி விழும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.