நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. தர்காவின் அலங்கார வாசல் அருகே உள்ள சாலையில் பள்ளம் ஒன்று இருந்தது. இந்த பள்ளத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து "தினத்தந்தி" புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் இருந்த பள்ளத்தை மூடி சீரமைத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.