சாலையில் இடையுரக உள்ள, உயிரைக் காவுவாங்கும் குப்பை தொட்டியை அகட்ரா வேண்டும்.
துடியலூர் பகுதியில் உள்ள மின்மயானம் முன்பு சாலையில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை மிகவும் குறுகலாக இருப்பதாலும், சாலையில் குப்பை தொட்டியை வைத்துள்ளதாலும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் குப்பை தொட்டி இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே குப்பை தொட்டியை சாலையில் ஓரத்தில் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.