பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் மெட்ரோ நிலையம் அருகே சாலை உள்ளது. இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும். இந்த நிலையில் அந்த சாலையில் ஆங்காங்கே மாடுகள் படுத்து கிடக்கின்றன. இதனால் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.