பெங்களூரு பென்னிகனஹள்ளி பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகே தொலைதொடர்பு நிறுவனம் சார்பில் கம்பிகள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பணிகள் முடிவடைந்து பலநாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும், அந்த பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதியினர் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளத்தை சரிசெய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.