ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் கவுண்டம்பாளையம் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வேகத்தடையில் வெள்ளை கோடு இல்லாததால் பகல் நேரத்திலும் கூட வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் விபத்துக்கு உள்ளாகின்றனர். அதேபோல் இரவு நேரங்களிலும் வேகத்தடை மீது வெள்ளை கோடு இல்லாததால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளும், ஆட்டோ மற்றும் லோடு ஆட்டோ போன்றவைகளும் விபத்துக்குள்ளாகின்றன. இதனால் பலர் காயம் அடைகின்றனர். எனவே விபத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை மீது வெள்ளை வர்ணம் பூச வேண்டியது அவசியமாகிறது என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-கண்ணன், நாமக்கல்.