நாகை அந்தோணியார் கோவில் செல்லும் சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ள சாலையை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். மேலும், வேகமாக சென்று வரும் வாகனங்களால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?