சாலை வசதி தேவை

Update: 2022-10-05 11:34 GMT
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 37-வது டிவிசன், உடையாப்பட்டி மின்வாரிய அலுவலக பின்புறம் கந்தாஸ்ரமம் செல்லும் வழியில் 2-வது வீதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி, சாக்கடை கால்வாய் வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த பகுதி மக்களின் நலன் கருதி சாலை, சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-தனம், சேலம்.

மேலும் செய்திகள்