தினத்தந்திக்கு நன்றி

Update: 2022-10-05 11:32 GMT

தர்மபுரி நகராட்சி அண்ணாமலை தெரு பகுதியில் உள்ள கான்கிரீட் சாலை சேதம் அடைந்து பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அதிகாரிகள் நடவடிக்கையால் அந்த சாலை சீரமைக்கப்பட்டு தற்போது புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட உதவிய தினத்தந்திக்கும் அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-மணி, தர்மபுரி.

மேலும் செய்திகள்