புதிய பாலத்தில் சாலை அமைக்கவேண்டும்

Update: 2022-10-03 10:37 GMT

கூத்தாநல்லூர் தாலுகா, லெட்சுமாங்குடியில் இருந்து கொரடாச்சேரி செல்லும் சாலையில் சேகரை என்ற இடத்தில், சாலையின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டப்பட்டு பல மாதங்களை கடந்தும் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் பாலத்தில் ஜல்லி கற்கள் சிதறி கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்