வேகத்தடை வேண்டும்

Update: 2022-10-03 10:33 GMT

நாகை மாவட்டம் மேலவாஞ்சூர் பகுதியில் உள்ள சாலையில் முறையான வேகத்தடைகள் இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகமாக சென்று வருகின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். மேலும், வேகமாக சென்று வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

படம் இல்லை

பொதுமக்கள் நாகூர்.

====

மேலும் செய்திகள்