சேறும் சகதியுமான சாலை

Update: 2022-10-03 10:31 GMT

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த அரவத்தூர் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும்,குழியுமாக உள்ளது.

மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்