தர்மபுரி டவுன் பஸ் நிலையத்திற்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலைய வளாகத்தில் கான்கிரீட் சாலை பல இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.