ராஜாக்கமங்கலத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் மேற்கு கடற்கரை சாலையில் ராஜாக்கமங்கலம் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகே உள்ள திருப்பத்தில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பாதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சீரமைக்கப்பட்டது. ஆனால், அந்த பள்ளத்தை முறையாக சீரமைக்காததால் ஜல்லிகள் பெயர்ந்து பள்ளமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.நாகராஜன், ராஜாக்கமங்கலம்.