குண்டும், குழியுமான சாலை

Update: 2022-10-02 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரெயில் நிலையம் வாசல் பகுதியில் இருந்து உள்ளே நுழையும் பகுதி வரை சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மழை காலங்களில் தண்ணீர் முட்டு அளவிற்கு தேங்கி கிடக்கும் அவலமும் உள்ளது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரிசெய்ய கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்