குழாய் உடைப்பால் சேதமான தார்சாலை

Update: 2022-10-02 10:05 GMT

மடத்துக்குளத்தையடுத்த துங்காவி பகுதியிலிருந்து மெட்ராத்தி, பணத்தம்பட்டி, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய ரோடு உள்ளது. இங்குள்ள கூட்டுறவு வங்கிக்கு அருகில் பூளவாடி ரோடு பிரியும் பகுதியில் அடிக்கடி குடிநீர்க் குழாய் உடைப்பு ஏற்படுகிறது. இதனால் தார் ரோடு சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர்க்குழாய் உடைப்பால் குடிநீர் தொடர்ந்து வீணாவதைத் தடுக்கவும், ரோட்டைப் பழுது நீக்கி விபத்துக்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்