வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-10-01 14:47 GMT

கோவை பாலசுந்தரம் சாலை போலீஸ் பயிற்சி மைதான நுழைவு வாயில் முன்பு மிகவும் பழுதடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவில் தவறி விழுந்து காயம் அடையும் நிலை காணப்படுகிறது. இதனால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்துகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்