கோவை ராமநாதபுரம் 80 அடி சாலை சீரமைக்கப்பட்டு, சில ஆண்டுகளை கடந்து விட்டது. தற்போது அந்த சாலையின் நடுவே குழி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வேகமாக வரும் இருசக்கர வாகனங்கள், இந்த குழியில் சிக்கி கீழே விழும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக பீதியில் சென்று வரும் நிலை காணப்படுகிறது. எனவே சாலையில் ஏற்பட்டுள்ள குழியை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.