தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை ஒட்டி தொடங்கும் தார் சாலை 2 கிலோ மீட்டர் தூரத்தில் தர்மபுரி-சேலம் பைபாஸ் சாலையுடன் இணைகிறது. இந்த சாலை அமைந்துள்ள பகுதியைச் சுற்றி ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. பல்வேறு ஊர்களுக்கு செல்பவர்கள் மற்றும் தர்மபுரி நகரப் பகுதிக்கு வருபவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த தார் சாலை பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க வேண்டும்.