அதிவேகமாக செல்லும் வாகனங்கள்

Update: 2022-10-01 12:47 GMT
திண்டிவனம் பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்கின்றனர். இதனால் சாலையில நடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே திண்டிவனம் பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையின் முக்கிய பகுதிகளில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்