நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி குரவப்த்புலம் கடைதெரு மெயின்ரோட்டில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் செல்லும் நீர்த்தொட்டி உள்ளது. இந்த தொட்டி மூடப்படாமல் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் தொட்டிக்குள் மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் சாலையோரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் பள்ளத்துக்குள் விழுந்து விடுகின்றனர். இதனால் அந்த சாலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்பலி வாங்க காத்திருக்கும் தொட்டியை மூடி வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?