வளைந்த மின்கம்பம்

Update: 2022-09-30 13:27 GMT

கூடலூர் நகராட்சி அலுவலகம் வழியாக ஓவேலி செல்லும் சாலையில் வ.உ.சி. நகருக்கு திரும்பும் வளைவில் இருக்கும் மின் கம்பம் வளைந்து காணப்படுகிறது. இதனால் சாலையோரம் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. சில சமயங்களில் பஸ்கள், லாரிகள் செல்லும் போது மின் கம்பிகள் உரசும் அபாயம் உள்ளது. இதனால் மின் விபத்து ஏற்படலாாம். எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன் சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்