திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்தில் 20.காரக்கோட்டை பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு பணிகளுக்காக அப்பகுதி மக்கள் சென்ற வருகின்றனர். இந்த நிலையில் 20.காரக்கோட்டை பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.