பழனி பஸ்நிலையம் அருகே உள்ள குளத்துரோட்டில் சில நாட்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டது. அதையடுத்து அதில் யாரும் விழாமல் இருக்க தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டது. எனினும் பள்ளம் விழுந்து பல நாட்கள் ஆகியும் இன்றுவரை அது சரி செய்யப்படாததால் இரவு நேரங்களில் விபத்துகள் அரங்கேறி வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை சார்பில் உடனடியாக பள்ளத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.