பெங்களூரு ஹூடி ராஜ்பாளையா பகுதியில் உள்ள சாலை கடந்த சில ஆண்டுகளாக குண்டும், குழியுமாக மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. இந்த சாலையால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் சாலையோரம் உள்ள நடைபாதையின் சிமெண்ட் சிலாப்புகளும் உடைந்து கிடக்கிறது.
இதனால் நடைபாதை, சாலையை பயன்படுத்த முடியாமல் முதியவர்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். மக்கள் சிரமத்தை போக்கும் வகையில் சாலை, நடைபாதையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.