தவறி விழ வைக்கும் சாலை

Update: 2022-09-28 14:16 GMT

நீலகிரி மாவட்டம் ஏலமன்னாவில் இருந்து மேங்கோரேஞ்ச் வழியாக பந்தலூருக்கு சாலை செல்கிறது. இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைகின்றனர். வனவிலங்குகள் துரத்தினால் கூட விரைவாக ஒட முடியாத நிலையில், தவறி விழுந்து அவற்றின் தாக்குதலுக்கு ஆளாகும் அபாய நிலை உள்ளது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்