குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-28 13:26 GMT

திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புதூர்,ராமச்சந்திர நகர்,சீனிவாசா தெரு பகுதிகளில் சாலை கடந்த சில மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.



மேலும் செய்திகள்