வேகத்தடையில் வர்ணம்பூசப்படுமா?

Update: 2022-09-28 13:23 GMT

நாகூர்-நாகை சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேதத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் வேகத்தடையில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாகூர்- நாகை சாலையில் வேகத்தடையில் வர்ணம் பூச உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்