சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-28 13:16 GMT

நாகை மாவட்டம் கொத்தமங்கலம் ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திட்டசேரியில் இருந்து அனந்தநல்லூர் வழியாக கொத்தமங்கலம் வரை செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சிமெண்டு சாலையான இந்த சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமான காட்சி அளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அந்த வழியாக சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்