கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையில் கே.தியேட்டர் சாலை அமைந்துள்ளது. ஜவுளிக்கடைகள், நகை கடைள், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை கடைகள் என ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் இ்ந்த பகுதியில் அமைந்துள்ளன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்காக இந்த பகுதிக்கு வந்து செல்கிறார்கள். இந்த கே. தியேட்டர் சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். நகரில் சென்னை சாலை, பெங்களூரு சாலை உள்பட பல இடங்களில் புதிய சாலைகள் அமைக்கப்பட்ட போதிலும் கே. தியேட்டர் சாலை நீண்ட காலமாக சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.