திண்டிவனம் பகுதியில் ஆங்காங்கே சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் சாலை பள்ளத்தில் சிக்கி கிழே விழுந்து படுகாயம் அடைந்து வரும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.