ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து நயினார்கோவில் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகனஓட்டிகள் தினமும் சிறு, சிறு விபத்தில் சிக்கி வருகிறார்கள். மேலும் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.