புதுச்சேரி தவளக்குப்பத்தில் இருந்து தானம்பாளையம் வழியாக நல்லவாடு மீனவ கிராமம் செல்லும் சாலை மிகவும் சேதம் அடைந்து, மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.