விபத்து அபாயம்

Update: 2022-09-26 16:33 GMT
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் வால்வு தொட்டியின் மீது இரும்பாலான மூடி அமைக்கப்பட்டது. தற்போது அங்கு புதிய சாலை அமைக்கப்பட்டதால், குடிநீர் குழாய் வால்வு தொட்டி மூடியானது சற்று பள்ளமாக உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, சாலைக்கு இணையாக, குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு கான்கிரீட்டாலான மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்