ஆமை வேகத்தில் தரைப்பால பணி

Update: 2022-09-26 16:22 GMT

திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டையில் இருந்து ம.மூ.கோவிலூர் செல்லும் வழியில் தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் ஆமைவேகத்தில் நடப்பதால் அங்கு சாலை அமைக்கப்படவில்லை. மண்பாதையே உள்ளது. மழைக்காலங்களில் இந்த பாதை சேறும் சகதியுமாக மாறுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே தரைப்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்