தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் ராமக்காள் ஏரியில் இருந்து பழைய தர்மபுரி வரை உள்ள பகுதியில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் இரவு நேரங்களில் அடிக்கடி எரிவதில்லை. இதனால் இந்த சாலை இருளில் மூழ்கி விடுகிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இரவு நேரங்களில் இந்த பகுதியில் மின் விளக்குகள் எரிய செய்ய வேண்டும்.