மயான சாலையை சீரமைக்கவேண்டும்

Update: 2022-09-26 14:45 GMT

நாகை மாவட்டம், வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மலையான் குத்தகை மற்றும் புதுத்தெரு மயான சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்ல அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்