கூடலூர் நகராட்சி அலுவலகம் அருகே ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் வளைவான இடத்தில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே அப்பகுதி முழுவதும் சாலையில் குண்டும், குழியுமாக உள்ள இடங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.