மரக்காணம் அருகே வண்டிப்பாளையத்தில் இருந்து ஆத்திக்குப்பம் வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. சாலை முழுவதும் ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதால், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடையும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. அதனால் சேதமடைந்த சாலையை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.