விக்கிரவாண்டி தாலுகா சூரப்பட்டு முதல் அனந்தபுரம் வரை உள்ள மெயின் ரோடும், செம்மேடு கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழை பெய்தால், சாலையில் உள்ள பள்ளங்கள் அனைத்தும் நிரம்பி குட்டை போல் காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம், இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதை தவிர்க்க உடனடியாக சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.