முட்புதர்களால் விபத்து

Update: 2022-09-25 14:29 GMT

கொளப்பள்ளி அருகே அய்யன்கொல்லி செல்லும் சாலையின் இருபுறமும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை காணுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். மேலும் வனவிலங்குகள் சாலையோரம் நின்றால் கூட தெரிவது இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே சாலையோர முட்புதர்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்